விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, சமூக அந்தஸ்து உள்ளவர்களின் ஆதரவால் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். நண்பர்களின் உதவியும் குடும்பத்தினரின் பாசமும் நல்ல விதமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் அடிக்கடி நிகழும், அதன்மூலம் லாபமும் கிடைக்கும். வீடு, மனை, ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. எதிரிகள் பலமிழந்து போவார்கள். பெற்றோர்கள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக்கொள்வீர்கள். உடல் உஷ்ணம் தொடர்பான தொந்தரவுகள் இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் காரியம் சுமூகமாக முடியும். குடும்ப பெரியோர் ஆசியும் மகான்களின் தரிசனமும் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் சுமாராகவே இருக்கும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிப்படவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com